விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம்
தமிழ் நாட்டின் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றமை தொடர்பில் பா.ஜ.க தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு வருகைத்தந்த நிலையில் தொல் திருமாவளவன் விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கும் சென்றிருந்தார்.
இந்நிலையிலேயே இந்த விடயம் குறித்து தமிழ்நாட்டை மையப்படுத்தும் பா.ஜ.க தரப்பினர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர்
இந்த விடயம் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜயின் ஆட்சியை கேள்விக்குட்படுத்தும் செயல் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜ.கவின் பிரதம பேச்சாளர் நாராயணன் திருப்பதி, X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக்கு செல்ல முன்வரும் எந்தவொரு இந்திய அரசியல் தலைவரும் தமிழர்களுடன் ஒற்றுமையைக் காட்டவில்லை.
குறிப்பாக திருமாவளவன், ராஜீவ் காந்தியின் நினைவை அவமதிக்கிறார்," என்று அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசில் வி.சி.கவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது குறித்தும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |