சென்னையில் இரவுநேரம் பயங்கரம் : இரண்டு தொடருந்துகள் நேருக்குநேர் மோதல்
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சரக்கு தொடருந்து மீது விரைவு தொடருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று (11) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டதுடன் இரு பெட்டிகள் தீப்பற்றியுள்ளதுடன் விபத்தில் சிக்கிய பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு தொடருந்து மீது மோதி விபத்து
கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் தொடருந்தே விபத்தில் சிக்கியது.
வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை தொடருந்து நிலையம் அருகே சரக்கு தொடருந்து மீது மோதியது.
பலர் சிக்கி காயம் அடைந்தனர்
இந்த விபத்தில் 7 குளிர்சாதனப் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கி காயம் அடைந்தனர். இதில் முன்னே இருந்த சரக்கு தொடருந்தின் இரு பெட்டிகள் தீப்பற்றின.
இந்த விபத்தில் பலர் சிக்கி காயம் அடைந்த நிலையில் அம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |