யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியது ஜே.வி.பி : சாடும் கஜேந்திரகுமார்
இணைந்த வடகிழக்கை பிரித்ததும், கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியதும் இந்த ஜே.வி.பி தான் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - போரதீவு பற்று வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று (23.04.2025) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள்
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “ஏன் நாங்கள ஜேவிபி யை வெறுக்கிறோம் என்பதைக் கூறத்தேவையில்லை அது தமிழ் மக்கள் ஆழ்மனதில் உள்ளது.
கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியது தான் இந்த ஜே.வி.பி. இணைந்த வடகிழக்கை பிரித்ததும் இந்த ஜே.வி.பி. தான் என தெரிவித்தார்.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனபலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







