வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் (Vavuniya) உள்ள வாடிவீட்டில் இன்று (22) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது மாவீரகர்ளின் பெற்றோர் சார்பாக ஈகைச்சுடரினை ஏற்றியிருந்ததுடன் ஏனையவர்களினால் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
நினைவேந்தலில் கலந்துகொண்டோர்
அத்துடன் மாணவர்களிற்கான வினாவிடை மற்றும் நடன போட்டிகளும் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இவ் அஞ்சலி நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், யாழ் மாநாகர முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன், யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் போராளிகள் நலன்புரி சங்க முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
