ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பில் உடுத்துறை துயிலுமில்லத்தில் அஞ்சலி!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் மக்கள் திரண்டிருந்த நிலையில், மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த உணர்வுபூர்வமான சூழல் அங்கு நிலவியது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி மாவீரர்களை நினைவுகூர்ந்தமை, உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இம்முறை இடம்பெற்ற நினைவஞ்சலியின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி