தமிழ் தேசிய அரசியலை வேறோடு அழிக்க வரும் அநுரவின் அமைப்பு! வெளியாகிய எச்சரிக்கை
என்பிபி என்கின்ற ஜேவிபியால் கொண்டுவரப்பட்ட பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார்.
அதன்போது அவர், “தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஜா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள்.
உள்ளூராட்சி அதிகாரங்கள்
தங்களுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப்படுத்துவதற்காக அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு.இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும்.

கிராமங்களில் அவர்கள் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கையாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை.
இங்கு ஜனாதிபதி வருகின்ற போது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அபாயம்
கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களினுடைய பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்வதற்கே இந்த அமைப்பு செயற்படுகிறது என்று சொல்லிவிடலாம். அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் என்பிபியின் தலைமை கட்சியான ஜேவிபியிடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிகிறது.
தமிழ் தேசிய சக்திகள் இதனுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். ” என மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |