யாழில் சிறிலங்கா கடற்படையின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய சி.ஐ.டி
யாழ்.பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வந்ததாக குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் காணாமல்போனவர்கள் தொடர்புடைய ஒரு விடயத்தை விசாரிக்க தங்கள் திணைக்கள அதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அவர்களை தொடர்ந்தும் விசாரணை செய்ததில் காங்கேசன்துறை பகுதிக்கு பொறுப்பான கடற்படை உளவுத் துறை பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யை பின்தொடர உத்தரவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உறுதி செய்யப்பட்ட சம்பவம்
இது குறித்து நீதிமன்றுக்கு அறிவித்த சிஐடி அதிகாரிகள் ரூபசிங்கவையும் அழைத்து விசாரித்துள்ள நிலையில், அதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்னவின் வழக்கு விசாரணையின் போதும் கமாண்டர் ரூபசிங்க நீதிமன்றில் இருந்துள்ளமையும் சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா
