யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை மூவர் கைது
arrest
jaffna
navy
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை திடீர் சோதனை நடவடிக்கையில் மூவர் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 29 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவை இவர்கள் கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய மீன்பிடிப் படகும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் – கோவிலம் கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூநகரி மற்றும் கரைச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி