வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
அனுராதபுரம் - குருணாகலை பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (25) அதிகாலை குருணாகலை - அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிவவருகையில், குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆறு பேர் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வேனில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில், தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
