குருணாகலை உலுக்கிய கோர விபத்து: பரிதாபமாக பலியான ஏழு பேர்
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka
Accident
By Shalini Balachandran
குருணாகலில் (Kurunegala) இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
குருணாகலை - மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்தில் உயிரிழந்த பிக்குகளில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிக்குகளின் உடல்கள்
ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விபத்து நடந்த நேரத்தில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
