மூன்று பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
காசாவில்(gaza) இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை அடுத்து தம்மால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல்(israel) பணயக்கைதிகளில் மூவரை ஹமாஸ்(hamas) அமைப்பு விடுவித்துள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள்
"விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் தற்போது தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ஆரம்ப வரவேற்பு இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள், அங்கு அவர்கள் ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளை பொறுப்பேற்ற சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவர்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. ரோமி கோனென், (24); டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர்( 31) மற்றும் எமிலி டமாரி, (28) ஆகிய மூவரே விடுவிக்கப்பட்டவர்களாவர்.
அணிவகுத்து நின்ற ஹமாஸ் உறுப்பினர்கள்
பயணக்கைதிகள் விடுவிப்பில் பெருமளவு ஹமாஸ் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் அணிவகுத்து நின்றமை அவர்கள் மீண்டும் காசாவில் தமது ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான வெளிப்பாடு என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதேவேளை பணயக்கைதிகளை விடுவித்த பின்னர் ஹமாஸ் வெளியிட்ட முதல் அறிக்கையில், இன்று GMT 09:15 மணிக்கு நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
குழுவின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, முதல் ஆறு வார கட்டத்தின் போது பணயக்கைதிகள்-கைதிகளுக்கான பரிமாற்ற அட்டவணையைப் பின்பற்றும் என்று குறிப்பிட்டது.
ஆனால் இஸ்ரேலிய போர்நிறுத்த மீறல்கள் ஒப்பந்தத்தை அச்சுறுத்தும் என்றும், காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் தனது காணொளி உரையில்,அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா எச்சரித்தார்.
"எல்லாம் எதிரியின் உறுதிப்பாட்டைப் பொறுத்தது" என்று அவர் குறிப்பிட்டார., இஸ்ரேலை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு மத்தியஸ்தர்களை அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |