கனடாவில் துப்பாக்கிசூடு : மூவர் துடிதுடித்து பலி
கனடாவின் (canada)ஒன்றாரியோ(ontario) மாகாணத்தின் ஹுன்ட்வில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இரவு 09 மணியளவில் 52 வயதான நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தன்னிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும், இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தீங்கு விளைவித்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்
காவல்துறையினர் அந்த நபருடன் தொலைபேசியில் பேசியதாகவும், தகவல் தொடர்புகள் நிறுத்தப்பட்டபோது, அதிகாரிகள் வீட்டில் உள்ளவர்களை தேடுவதற்கு ஒரு ட்ரோனை உள்ளே அனுப்பியதாகவும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோ மாகாண காவல்துறையும் சிறப்பு புலனாய்வுப் பிரிவும் (SIU) தனித்தனியாக இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
மரணங்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை
இந்த மரணங்களுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
தகவல் தெரிந்தவர்கள்
சிறப்பு புலனாய்வுப் பிரிவு(SIU) விசாரணைக்கு உதவக்கூடிய புகைப்படங்கள் அல்லது காணொளிகள் உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட எவரும், அதன் இணையதளத்தின் மூலம் 1-800-787-8529 என்ற எண்ணில் முன்னணி புலனாய்வாளரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணையான காவல்துறை விசாரணைக்கு உதவக்கூடிய தகவலைக் கொண்ட எவரும் Huntsville OPP ஐ 1-888-310-1122 என்ற எண்ணில் அல்லது அநாமதேயமாக அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |