வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்!
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், மூன்று இலங்கை நாட்டினர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுடன், ஒரு குவைத் குடிமகன், ஓர் இந்திய நாட்டவர் மற்றும் பெடூன்கள் எனப்படும் நாடற்ற நபர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினரிடமிருந்து, கடத்தலுக்காகவும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கை
அத்துடன் போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து 2.550 கிலோகிராம் ஹஷிஷ், 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பெட்டமைன் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், சட்டவிரோத விநியோகத்திற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளும் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் 6,350 லைரிகா ) காப்ஸ்யூல்கள், 500 கேப்டகான் மாத்திரைகள், மற்றும் தலா 50 சானாக்ஸ் , மெத்தடோன் மாத்திரைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக குவைத் சட்டத்தின்படி மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 17 மணி நேரம் முன்