புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!
புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர்கள் புலத்சிங்கள பகுதியில் நேற்று (21.08.2026) இடம்பெற்றுள்ளது.
புலத்சிங்கள காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட போதலேகம பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 37, 52 மற்றும் 67 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அகழ்வுப் பணிகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், இந்த சட்டவிரோத அகழ்வுப் பணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |