முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை ரூ. 20 உயர்த்துமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தேசிய கூட்டு முச்சக்கர வண்டி மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா இன்று காலை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாரிய பிரச்சினை
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இன்று முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு எங்கள் சேவைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

எங்கள் சேவையை வழங்க எங்களிடம் போதுமான எரிபொருள் இல்லை, ஆனால் அரசாங்கம் விலையை உயர்த்தியுள்ளது. இது மரத்திலிருந்து விழுந்த மனிதனைக் காளை முட்டியது போல் உள்ளது.
முதல் கிலோமீற்றருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணத்தை ரூ. 20 உயர்த்த நாங்கள் முன்மொழிகிறோம். மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மட்டுமே இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |