யாழில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் பலாலி வீதியில் திருநெல்வேலி பழம் வீதி அருகில் இடம்பெற்றுள்ளது.
கவலை வெளியிட்ட சாரதி
தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்றபோதும் காவல்துறையினரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பிக்மீ சாரதி கவலை வெளியிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில், பிக்மீ செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கு உள்ளாகுவதும் தொடர்கதையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி