தலாய் லாமாவின் இலங்கை பயணம்! சீனா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை சீனா தடுப்பதாக இலங்கையை சேர்ந்த கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுடனான நேர்காணலின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சீனாவின் நிலைப்பாடு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தலாய் லாமா குறித்து சீனா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
தலாய் லாமாவிற்கு புத்தரின் புனித நினைவுச் சின்னம் வழங்கப்பட்டமை தொடரடபில் தற்போது சீனா சீற்றமடைந்திருக்கும்.
இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த பௌத்த மத தலைவர்கள், தலாய் லாமாவை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இலங்கைக்கான அழைப்பு
எனினும், சீனா அதனை விரும்பவில்லை. சீனா எங்கள் அரசாங்கத்திற்கு இது குறித்து அழுத்தம் கொடுத்தது.
இது எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர் ஒரு பௌத்த தலைவர். அவருக்கு சுதந்திரம் உள்ளது. அவரை இலங்கைக்கு அழைப்பதற்கான சுதந்திரம் எங்களுக்குள்ளது.
எதிர்காலத்தில் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைவோம்.
இந்தியாவே எங்கள் தாய்நாடு
இந்தியாவே எங்கள் தாய்நாடு. எனது கலாச்சார மத தொடர்புகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தன.
எங்கள் மொழியும் இந்தியாவிலிருந்தே ஆரம்பமாகின்றது. நாங்கள் இந்தியாவுடன் எங்கள் நட்புறவை வளர்க்க வேண்டும். எங்கள் மூத்த சகோதரர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |