மூடப்படும் தொழிற்சாலைகள் 50 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் (படங்கள்)

Sri Lankan Peoples Ministry of Finance Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sumithiran May 31, 2022 10:38 AM GMT
Report

மூடப்படும் ஓடு தொழிற்சாலைகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டினால் நாட்டில் ஓடு கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டில் தற்போதுள்ள 225 ஓடு தொழிற்சாலைகளில் சுமார் 200 தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கூரைத் தேவையில் 30 வீதத்தை பூர்த்தி செய்யும் ஓடு கைத்தொழில் வீழ்ச்சியடைவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 500,000 வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பாப்டிஸ்ட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மூடப்படும் தொழிற்சாலைகள் 50 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் (படங்கள்) | Tile Factories Closing Due To Kerosene Shortage

தொழிற்துறையின் நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த தலைவர், “ஒரு தொழிற்சாலைக்கு ஓடு தயாரிக்க வாரத்திற்கு குறைந்தது 50 லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது.

சில காலமாக பெட்ரோலியத்துறை அமைச்சர், நிதியமைச்சக செயலாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து,இந்தத் தொழிலை நடத்துவதற்கு தேவையான நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதில் இல்லை.

தற்போது நாட்டின் கூரைத் தேவையில் 30% ஓடுகளால் பூர்த்தி செய்யப்படுகிறது. அத்துடன் 70% வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தீவிர வெப்பநிலைக்கு தீர்வாகவும் பூர்த்தி செய்யப்படுகிறது.

 மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

இன்று, நாட்டில் மலிவாக கூரை ஓடுகள் மட்டுமே கிடைக்கின்றன. கம்பஹா மாவட்டத்தில் கட்டான பிரதேசத்தில் நாற்பது ஓடு தொழிற்சாலைகளும், திவுலப்பிட்டிய மற்றும் மீரிகமவில் பத்தும், களனி மற்றும் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் உள்ளன. இத்தொழிற்சாலைகளுக்கு தேவையான களிமண் களனி பள்ளத்தாக்கு, மஹா ஓயா பள்ளத்தாக்கு மற்றும் தெதுரு ஓயா பள்ளத்தாக்கு ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது.

மூடப்படும் தொழிற்சாலைகள் 50 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் (படங்கள்) | Tile Factories Closing Due To Kerosene Shortage

நாட்டின் கட்டுமானத் தொழிலின் முக்கிய தேவைகளில் ஒன்றான மட்பாண்டத் தொழிலை 100% உள்ளுர் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி சரிவின்றி தக்கவைக்க மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.


GalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026