இந்தியாவில் பாஜகவின் மூத்த தலைவர்களுடன் ரில்வின் சில்வா பேச்சு
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் தூதுக்குழுவினர், இந்தியாவில் தற்போது மேற்கொண்டு வரும் பயணத்தின் ஒரு பகுதியாக, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாஜகவின் அழைப்பின் பேரில் ஜேவிபி தூதுக்குழுவினர் மேற்கொண்ட இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (28) இந்தசந்திப்பு நடைபெற்றது.
பாஜகவின் வரலாறு மற்றும் அமைப்பு ரீதியான கட்டமைப்பு
இப்பேச்சுவார்த்தையின் போது, பாஜகவின் வரலாறு மற்றும் அமைப்பு ரீதியான கட்டமைப்பு குறித்தும், குறிப்பாக கிராமப்புற மட்டம் வரை அக்கட்சி எவ்வாறு தனது உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்கிறது என்பது குறித்தும் ஜேவிபி தூதுக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
The JVP delegation, led by General Secretary Mr Tilvin Silva, visited @BJP4India HQ and interacted with Shri B. L. Santhosh Ji, National General Secretary (Organisation),BJP.
— Videsh Vibhag -Bharatiya Janata Party (@overseas_bjp) September 29, 2026
He briefed them on BJP’s history, organisational journey and extensive grassroots network. @blsanthosh pic.twitter.com/MrKh2W6axs
இந்தியாவின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் தலைமைத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளையும் நட்பையும் மேலும் மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜேவிபி மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு இடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர புரிதலை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
பாரதிய ஜனதா மகளிர் அணித்தலைவியுடனும் சந்திப்பு
இப்பயணத்தின் ஒரு பகுதியாக, பாஜகவின் மகளிர் அமைப்பின் தேசியத் தலைவரான ரூப்குமாரி சவுத்ரியுடனும் ஜேவிபி தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
On Day 3, JVP delegation interacted with Smt Priti Gandhi, Social Media Co-Convenor, BJP. @MrsGandhi
— Videsh Vibhag -Bharatiya Janata Party (@overseas_bjp) September 30, 2026
The discussion covered the BJP’s social media structure from the national to booth level,the role of volunteers,functioning of State teams & digital outreach to karyakartas… pic.twitter.com/Cg8GIHXAr1
பாஜகவின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகளான வினீத் வாட்ஸ் தியாகி மற்றும் பக்தி சர்மா ஆகியோருடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் அனோஜனை மன்னிக்வேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |