கோர விபத்தில் சிக்கிய பேருந்து! பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட சாரதி - 26 பேர் வைத்தியசாலையில்
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் - டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
டிப்பர் வாகன சாரதி படுகாயங்களுடன் வாகனத்தில் சிக்குண்டு தவித்ததையடுத்து சுமார் அரை மணி நேரம் பொதுமக்கள் போராடி டிப்பர் வாகனச் சாரதியை டிப்பரிலிருந்து இழுத்தெடுத்து மீட்டுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 26 பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தினையடுத்து திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.