தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக குகதாஸ்: தமிழரசுக் கட்சியில் தீர்மானம்

TNA Mavai Senathirajah R. Sampanthan ITAK
By Shadhu Shanker Jul 03, 2024 09:27 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக சபா.குகதாஸ் (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

மறைந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(R. Sampanthan) நினைவேந்தல் நேற்று(2) யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே,  மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய கர்தினால் மல்கம் ரஞ்சித்

சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய கர்தினால் மல்கம் ரஞ்சித்

 புதிய தலைவர் தெரிவு

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை என்னும் பிரதேசத்தில் தமிழர்களுடைய தலைநகரம் நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிங்கள மாயமாகி, பெளத்த மதமாகி இருக்கின்ற இந்த கால கட்டத்தில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நிலத்தின் விடுதலைக்காக எங்களை கொள்கையினை நிலைநாட்டுவதற்காக எங்கள் பெரும் தலைவரை இழந்திருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக குகதாஸ்: தமிழரசுக் கட்சியில் தீர்மானம் | Tna S New Leader Kugadhas

அடுத்ததாக திருகோணமலை மாவட்டத்தின் குகதாஸ் அதிவிருப்பு வாக்குகளை பெற்றதன் காரணமாக அவரை அடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தெரிவுசெய்வதற்கு மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கின்றது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களது இறுதிக்கிரியை எதிர் வரும் 07.07.2024 அன்று இடம்பெற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி குறித்த வெற்றிடத்திற்கு குகதாஸ் அவர்களை நியமிப்பது என எண்ணியுள்ளோம்.

தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தில் மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளை குகதாஸ் பெற்றதன் காரணமாக அவரை நியமிப்பது என்று மத்திய குழு தீர்மானம் எடுக்கும் என நம்புகின்றேன் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரானார் சண்முகம் குகதாசன்: வர்த்தமானி வெளியீடு

நாடாளுமன்ற உறுப்பினரானார் சண்முகம் குகதாசன்: வர்த்தமானி வெளியீடு

சம்பந்தனின் முயற்சி பலனற்று போனமை கவலையளிக்கிறது! ஆனந்தசங்கரி இரங்கல்

சம்பந்தனின் முயற்சி பலனற்று போனமை கவலையளிக்கிறது! ஆனந்தசங்கரி இரங்கல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021