வடகொரிய ஜனாதிபதியின் தலைமுடி போன்று வேண்டும் - அடம்பிடித்த இளைஞர் -இறுதியில் நடந்தது என்ன?
president
north korea
hair style
By Sumithiran
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமுடியை போன்று தனக்கும் வேண்டும் என்று சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளரிடம் இளைஞர் ஒருவர் அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்ற அந்த இளைஞர் தனக்கு வடகொரிய அதிபரின் தலைமுடியை போன்று முடியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். முதலில் முடியாது எனக்கூறிய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் பின்னர் மனம்மாறி, வடகொரிய அதிபரின் தலைமுடியை போல, அந்த நபருக்கு சிகை அலங்காரம் செய்திருக்கிறார்.
தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் கண்ட அந்த நபரும், சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளரும் வாய்விட்டு சிரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பழையதா அல்லது புதியதா என்பதும், எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை.