விபத்தில் முழங்காவில் கிராம அலுவலர் உயிரிழப்பு
accident
mulankavil
pallavarayankaddu
By Vanan
மன்னார் - பூநகரி வீதியின் பல்லவராயன்கட்டு சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் முழங்காவில் பகுதியின் கிராம அலுவலரான நகுலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது மனைவி படுகாயடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த கிராம அலுவலரின் சடலம் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்