யாழில் இடம்பெற்ற கோர விபத்து: நால்வர் படுகாயம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
யாழ்பாணத்தில் (Jaffna) கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் A9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது, கனரக வாகனம் பின்னால் திருப்ப முற்பட்டவேளையில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்