இன்று இலங்கை - பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை
Cricket
Sri Lanka
Asian Games 2023
By Beulah
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் - நேபாளம்

அவ்வகையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானின் முதல்தானில் நேற்று(30) மதியம் 3 மணியளவில் ஆரம்பமாகியது.
இப்போட்டியில், துடுப்பாட்டம், பந்து வீச்சு என மிரட்டிய உலகின் முதல்தர அணியான பாகிஸ்தான் நேபாளத்தை 238 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.