கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள் - முடங்கியது பிரதான வீதி: 30 பேர் காயம்
Colombo
Kandy
Sri Lankan Peoples
By Dilakshan
கொழும்பு-கண்டி வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் பாரிய பேருந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்படும் இரண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதேவேளை, பேருந்து விபத்தின் பின்னர் மேலும் பல வாகனங்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு-கண்டி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்