கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sathangani
கொழும்பில் (Colombo) பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மீகொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீகொடை - படவல பிரதேசத்தில் இன்று (31) அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது வீட்டிலிருந்த எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வீட்டில் உள்ள பிரபல வர்த்தகரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்