இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (19.02.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 05.00 வரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு ஆகியன நடைபெறவுள்ளன.
அத்துடன் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானத்தின் 235 ஆம் அத்தியாயம் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகளின் 203 ஆம் அத்தியாயம் அங்கீகரிக்கப்படவுள்ளது.
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |