காணிவிடுவிப்பு தொடர்பில் உண்மை பேசுவது யார் என கேள்வியெழுப்பியுள்ள சாணக்கியன்..!
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் மாத்திரம் இராணுவ முகாம்களை பாதுகாப்பு கருதி வைத்திருக்கின்றோம் எனக் கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய போதே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“குருக்கள்மடம் பாடசாலைக்குரிய மைதானக் காணியானது இராணுவ கட்டுப்பாட்டினுள் இல்லை எனக் கூறினாலும் தற்போது வரை அவ் மைதான காணி இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
மொறக்கொட்டான் சேனையில் இராணுவ முகாம் அமைத்திருக்கும் பாடசாலைக்கு பதிலாக பிறிதொரு பாடசாலையினை அமைத்ததாக கூறியுள்ளீர்கள்.” என கூறினார்.
அத்துடன் காணிவிடுவிப்பு தொடர்பில் உண்மை பேசுவது அதிபரா? அல்லது பாதுகாப்பு அமைச்சரா? என சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |