இன்பக்கடலில் மூழ்கப்போகும் 4 ராசியினர்..! இனி இவர்களுக்கு யோக பலனாம் - இன்றைய ராசிபலன்
இன்றைய தினத்திற்கான சுருக்கம்
இன்று மங்கலகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி)
இன்றைய தினத்திற்கான திதி, நட்சத்திரம் என்பவற்றைப் பார்ப்போமானால், காலை 08.00 மணி வரை அட்டமி திதியும், அதனைத் தொடர்ந்து நவமி திதியும் ஆரம்பமாகிறது.
நட்சத்திரமாக இன்று இரவு 07 மணி 59 நிமிடம் வரை கேட்டை நட்சத்திரத்திரமும் அதனைத் தொடர்ந்து மூல நட்சத்திரமும் வருகிறது.
இன்றைய தினத்திற்கான நல்ல / சுப நேரமாக காலை 06. 15 தொடக்கம் 07. 15 வரை காணப்படுவதுடன், மாலை 03.15 தொடக்கம் 04.15 வரை காணப்படுகிறது.
ராகு காலமானது 04.30 தொடக்கம் 06. 00 மணி வரை காணப்படுகிறது.
எம கண்டமானது 12.00 மணி தொடக்கம் 01.30 வரை காணப்படுகிறது.
இன்றைய தினத்திலே சந்திராஷ்டம நட்சத்திரங்களாக பரணி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் குறிப்பிடப்பட்டு இருப்பதனால், இவ்விரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் சற்று அவதானமாக இருப்பது நல்லது.
அத்துடன், இன்று - மிதுனத்திற்கு வெற்றியும், கடகத்திற்கு உற்சாகம் நிறைந்த நாளாகவும், சிம்மத்திற்கு அனுகூலம் நிறைந்த மகிழ்ச்சிக்குரிய நாளாகவும், கன்னிக்கு புகழ், கீர்த்தி என்பன கிடைக்கின்ற நாளாக அமையப்போகிறது.
ஒவ்வொருவருடைய ராசிபலன்களினதும் சுருக்கம்
ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.