வானிலை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
எதிர்வரும் 23.10.2025 அன்று உருவாகும் என கணிப்பிடப்பட்டிருந்த தாழமுக்கம் எதிர்வரும் 21.10.2025 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டின் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடியான பாதிப்பு
அத்துடன், குறித்த தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது வலுக்குறைந்த புயலாக கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உருவாகவுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையின் எந்த பகுதிக்கும் நேரடியான பாதிப்புக்கள் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், எதிர்வரும் 21.10.2025 முதல் 25.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிக கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
அத்தோடு, எதிர்வரும் 21.10.2025 முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை மாத இறுதிவரை தொடரும் என எதிர்பார்க்கப்படுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
