நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்
Sri Lanka
Climate Change
Weather
By Sathangani
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (09) மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று (09) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கின்றது.
மழைஅல்லது இடியுடன் கூடிய மழை

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி