வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொழிற்சங்கங்கள் -நாளை ரயில்சேவை நடைபெறாது
srilanka
train
service
cancel
By Jaso
இலங்கை ரயில்வே சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கங்கள் இணைந்து நாளையதினம் (திங்கட்கிழமை) வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதால் ரயில் சேவைகள் நடைபெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் தமது தேவைக்காக மாற்று போக்குவரத்து சேவையை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் மேலதிகமாக இலங்கை போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் தெரிவித்தார்.
ஏற்கனவே ரயில்வே திணைக்களம் கண்டி, மகாவ, சிலாபம், ரம்புக்கனை மற்றும் பெலியத்த பகுதிகளிலிருந்து மக்களின் அதியாவசிய தேவைக்காக நாளையதினம் விசேட ரயில் சேவை நடத்தப்படுமென அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்