உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா!
உலகில் எந்தெந்த நாடுகள் பாதுகாப்பானது, எந்தெந்த நாடுகள் பாதுகாப்பற்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அரசியல் அமைதியின்மை, அதிக குற்ற விகிதங்கள், இயற்கை பேரழிவுகள், தனிப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றை வைத்து கணிக்கப்பட்ட உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களை இங்கே பார்க்கலாம்.
உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம், வெனிசுலாவின்(Venezuela) கராகஸ்(Caracas) ஆகும். இங்கு வன்முறை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதோடு அரசியல் குளறுபடிகள், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரமாகவும் உள்ளது.
ஆபத்துள்ள நகரம்
பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நகரம் பாகிஸ்தானின்(Pakistan) கராச்சி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக ஆபத்துள்ள நகரமாக இது பார்க்கப்படுகின்றது. இங்கு குற்றம், வன்முறை மட்டுமின்றி பயங்கரவாத அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது. இயற்கை பேரிடர்களும் அதிகம் ஏற்படும்.
மூன்றாவது இடத்தில் மியான்மரின்(Myanmar) யாங்கோன் நகரம் உள்ளது.
இந்த நகரத்திலும் குற்ற செயல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதுடன்பொருளாதார பிரச்சனைகளும் அதிகரித்து காணப்படுகிறது.
நான்காவது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ் உள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பேரிடர் அபாயம்
ஐந்தாவது இடத்தில் பிலிப்பைன்ஸின்(Philippines) மணிலா(Manila) உள்ளது. இங்கு இயற்கை பேரிடர் அபாயம் அதிகமாக உள்ளது.மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதால் ஆபத்தான நகரமாக கருதப்படுகிறது.
ஆறாவது இடத்தில் பங்களாதேஷின்(Bangladesh) டாக்கா நகரம் உள்ளது. இங்கு குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதுடன் வாழ்க்கைத் தரமும் மிகவும் மோசமாக உள்ளது.
ஏழாவது இடத்தில் கொலம்பியாவின் பொகோட்டா நகரம் உள்ளது. இது வண்ணமயமான நகரமாக இருந்தாலும் இங்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் குற்ற சம்பவங்கள் காரணமாக ஆபத்தான நகரமாக உள்ளது.
இதனை தொடர்ந்து உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் எகிப்தில் உள்ள கெய்ரோ நகரம் 8வது இடத்திலும், மெக்சிகோ 9 வது இடத்திலும், ஈக்வடாரில் உள்ள குய்டோ நகரம் 10வது இடத்திலும் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |