இலங்கையை சீர்குலைக்கும் சீனாவின் திட்டம்! பௌத்த உயர்பீடம் கொதிப்பு
International Monetary Fund
Sri Lanka
China
India
By Vanan
சீனக் கப்பல் வருகைக்கு கண்டனம்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஓகஸ்ட் 10ஆம் திகதி சீனக் கப்பல் வரவுள்ள சர்ச்சைக்குரிய விடயத்தைக் கண்டித்து இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்தினசார தேரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, மேற்கத்தேய உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிறுவனங்களை இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச உதவிகளை சீர்குலைக்க வாய்ப்பு

இந்த வேளையில், சீனக் கப்பலின் வருகை அத்தகைய உதவியைப் பெறுவதற்கான முயற்சிகளை சீர்குலைக்க வாய்ப்புள்ளது.
இதனால் இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி