சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அறிமுகமாகும் புதிய செயலி - ஹரின் பெர்னாண்டோ
Sri Lanka Tourism
Harin Fernando
By Dharu
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை(location) ஏனையவர் அறிந்துகொள்வதற்கு விரும்பினால் அனுமதிக்கலாம்.
மேலும், கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ,இவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுலா பயணி காவல்துறை குழு கடமையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
15 இலட்சம் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தொழில்துறையினை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கம் எனவும் 15 இலட்சம் சுற்றுலா பயணிகளை அடுத்த வருடம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறியள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி