சந்தையில் நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சந்தையில் நச்சுத்தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் (loose oil) தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக உற்பத்தியாளர் என்று குறிப்பிடப்பட்ட லேபிளுடன் உள்ள தேங்காய் எண்ணெயை(coconut oil) கொள்வனவு செய்யுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில்(colombo) இன்று (8) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தரம் வாய்ந்தது என பொது சுகாதாரத் தலைவர் ஒருவர் தவறான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும், அவர் கூறியிருப்பது மக்களை தவறாக வழிநடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றாத நோய்கள் தாக்கும் சாத்தியம்
செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் பார் உலோகங்கள் உள்ளதாகவும், இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றாத நோய்கள் தாக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் புத்திகடி சில்வா தெரிவித்தார்.
முறையான அறிவியல் சோதனை செய்யப்படாத நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எப்படி நல்லது என்று அறிவிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் துஷார விஜேசிங்க, எஸ்.கே.பி.ஜெயவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |