சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக போர்: ட்ரம்பின் வெளியிட்ட அறிவிப்பு
சீனாவுடனான (China) வர்த்தகபோர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்களுக்கு நீடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவிடம் (Russia) இருந்து மசகு எண்ணெய்யை இந்தியா (India) கொள்முதல் செய்வதாக கூறி 50 சதவீதம் வரை வரி உயர்த்துவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இருப்பினும், இந்தியாவை விட ரஷ்யாவிடம் அதிக மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்யும் சீனாவுக்கு அதிக வரியை விதிக்காதது ஏன் என்று கேள்விகள் எழுந்ததுள்ளது.
வர்த்தக போர்
இந்தநிலையில் சீனா மீதான வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இது சீனா மீதான வரி இடைநீக்கத்தை மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பது என்ற உத்தரவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அனைத்து கூறுகளும் அப்படியே இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
