இந்தியாவில் மற்றுமொரு தீ விபத்து : பிறந்த குழந்தைகள் தீயில் கருகி பலி
இந்தியாவின் (India) டெல்லியில் (Delhi) உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பிறந்த குழந்தைகள் பலியாகியுள்ளன.
டெல்லியின் விவேக் விஹாரில் உள்ள குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் நேற்று (25) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர் என டெல்லி தீயணைப்புத் துறை (Delhi Fire Department) தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், விபத்தில் மொத்தம் 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேர் இறந்துள்ளனர் எனவும், மேலும் ஒருவர் வென்டிலேட்டரில் (Ventilator) வைக்கப்பட்டதுடன் மற்றும் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகள்
மீட்கப்பட்ட பிறந்த குழந்தைகள் கிழக்கு டெல்லி அட்வான்ஸ் என்ஐசியூ (East Delhi Advance NICU hospital) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
தீயணைப்பு அதிகாரி
“இரவு 11:32 மணியளவில், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. மொத்தம் 16 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுமையாக அணைத்தன.
#WATCH | Delhi: A massive fire broke out at a New Born Baby Care Hospital in Vivek Vihar
— ANI (@ANI) May 25, 2024
As per a Fire Officer, Fire was extinguished completely, 11-12 people were rescued and taken to hospital and further details are awaited.
(Video source - Fire Department) https://t.co/lHzou6KkHH pic.twitter.com/pE95ffjm9p
2 கட்டிடங்கள் தீயினால் பாதிக்கப்பட்டன, ஒன்று மருத்துவமனை கட்டிடம் மற்றும் வலது பக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 2 தளங்களும் தீப்பிடித்து எரிந்தன.11-12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |