வாதுவ தல்பிட்டிய பகுதியில் தொடருந்து விபத்து!
Kalutara
Monaragala
Sri Lanka
By Dilakshan
வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வான் ஒன்று தொடருந்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (30) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த 344 எண் அதிவேக தொடருந்துடனயே குறித்த வான் மோதியுள்ளது.
தொடருந்து சேவை தடை

இதன் காரணமாக அப் பகுதியில் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானில் இருவர் பயணித்துள்ளதுடன், வானில் இருந்த ஒருவர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துடன். மற்றொருவர் வானில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை மீட்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர்.