நாளை முதல் மாகாணங்களுக்குள் தொடரூந்து சேவை
இலங்கையில் நாளை திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்குள் 133 தொடரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த தொடரூந்து திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொழும்பிற்கு வரும் தொடரூந்துகள் அளுத்கம, அவிசாவளை, அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் நாளை முதல் சேவைகளில் ஈடுபடும் என தொடரூந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறியுள்ளார்.
இருப்பினும் பருவகால பயணச் சீட்டை பயன்படுத்தும் தொடரூந்து பயணிகளுக்கு மாத்திரமே தொடரூந்து சேவைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான தொடரூந்து சேவை இடம்பெறாது என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான தொடரூந்து சேவைகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.