யாழ்ப்பாணத்திற்கான ரயில்சேவை நிறுத்தம்
Colombo
Jaffna
Train Crowd
By Jaso
பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் காங்ககேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு ரயில் பாதையில் திட்டமிடப்பட்ட 2ஆம் கட்ட பராமரிப்புப் பணிகள் மஹவ மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக
பராமரிப்பு பணிகள் 7 ஜனவரி 2024 முதல் மேற்கொள்ளப்படும் மற்றும் 6 மாதங்களுக்குள் இதனை முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ புகையிரத நிலையம் வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் மாத்திரம் புகையிரதங்கள் இயங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |