இலஞ்சம் கேட்ட பாடசாலை அதிபர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் பிள்ளைகளை ஆறாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் கேட்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகளை மேற்கொண்ட மாகாண கல்வி செயலாளர், தலைமை ஆசிரியரை உடனடியாக வத்தேகம கல்வி வலய அலுவலகத்திற்கு இடம்மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க 40,000 முதல் 50,000 ரூபாய் வரை பணம் கேட்பதாக பெற்றோர் வலய அலுவலகத்தில் புகார் அளித்ததையடுத்து, மாகாண கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெற்றோர் கூறிய புகார் உண்மை என தெரியவந்தது.
அதிபர் மீது ஒழுங்கு நடவடிக்கை
மாகாண கல்வியமைச்சின் அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத் பின்னர் அதிபரை பாடசாலையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அதிபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை, அவர் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு வலய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        