நாட்டின் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பியது!
நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சரும், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரும் தமக்கு அறியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் குறித்த போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 11 மணி நேரம் முன்