பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்! சிக்கிய போதைப்பொருள் வியாபாரி
Police
Arrest
Batticallo
By Chanakyan
மட்டக்களப்பு, காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்போதைப் பொருளுடன் பிரபல வர்த்தகர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து இன்று காலையில் காத்தான்குடி அல் அமீன் வீதியிலுள்ள குறித்த நபரின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை செய்த சந்தர்ப்பத்தில் சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான 86 கிராம் 356 மில்லிக்கிராம் ஐஸ் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 49 வயதுடையவர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி