புதையல் தோண்டிய எண்மர் கைது
திருகோணமலை ஈச்சிலம்பற்று காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 8 சந்தேக நபர்களை இன்று(3) அதிகாலையில் கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 45 வயதிலிருந்து 65 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வெருகல், மாவடிச்சேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டிய அவர்களை வெருகல் பகுதியிலுள்ள இராணுவ புலனாய்வினர் கைதுசெய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மண்வெட்டி - 2, அலவாங்கு -1,சவல் - 2, போத்தல் - 1, தாச்சி - 1,பிக்கான் - 1,பானை - 1மற்றும் மோட்டார் சைக்கிள் - 2 போன்றன கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
