மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Tamils
Mannar
Northern Province of Sri Lanka
Charles Nirmalanathan
By Shadhu Shanker
வடக்கு கிழக்கில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில், மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தலின் 9ஆம் நாளான இன்று (23.09) மாலை 4 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ஈகைச்சுடர் ஏற்றி
கட்சி அலுவலகத்தில் ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி!
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்