திருகோணமலையில் அந்நிய சக்திகளின் தலையீடு: போராட்டத்தில் குதித்த மக்கள்
திருகோணமலை நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று (02) காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை 4 மணியளவில் நிறைவு செய்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற உள்ள அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் திருகோணமலை நகரில் உள்ள சில பிரதேசங்கள் வேறு நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்க்கும் முகமாக பிரதானமாக உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்தியாவுக்கு விற்பனை
மேலும் பொதுமக்களுக்கு இவ் உணவு தவிர்ப்பு போராட்டத்தை விளக்கப்படுத்தும் நோக்கமாகவும் நகரில் உள்ள பிரதேசங்கள் வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க அல்லது தடுக்கும் முகமாக அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதன் போது குறித்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
எமது வளங்களை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் இதனை ஏற்க முடியாது மக்களின் சொத்துக்களை வளங்களை சூறையாட முனைகின்றனர்.
இதனை நிறுத்த வேண்டும் நாட்டின் முக்கிய வளங்களான துறை முகங்கள் விமான நிலையம் போன்றன தாரை வார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம்
திருகோணமலையில் முக்கிய கரையோர பிரதேசம் தொடக்கம் கப்பல் துறை வரையான பகுதி அபகரிக்கப்படுகிறதுஇதனை நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இலங்கை நாடு சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது இதற்கு எதிராக போராடியவர்களை கைது செய்துள்ளனர்.
மக்களுக்கு எதிரான ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து மக்களை அடக்கி ஒடுக்க முனைகின்றனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |