கொலையாளிக்கு பொது மன்னிப்பு என்றால் அப்பாவிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது? துரைநாயகம் கேள்வி

trinco release gotabhaya presoners s.thurainayagam
By Kalaimathy Jun 25, 2021 08:37 AM GMT
Report

மரண தண்டனைக் கைதிகளைக் கூட ஜனாதிபதி தனது பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை ஏன் பிணையிலாவது விடுதலை செய்ய முடியாது என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நான்கு கொலைகளைப் புரிந்த குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றத்தினாலும், உயர் நீதிமன்றத்தினாலும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட மரண தண்டனைக் கைதியைக் கூட ஜனாதிபதி தனது பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இன்றைய நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றியும், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் பல வருடகாலமாக தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை ஜனாதிபதியால் ஏன் விடுதலை செய்ய முடியாது?

நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை மரண தண்டனை கைதியின் விடுதலையை சமன் செய்யவா? என்ற கேள்வியும் மக்களிடத்தே எழுந்துள்ளது. அத்துடன் ஏற்கனவே இவரது விடுதலைக்காக முயற்சிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி பயன்படுத்திக் கொண்டாரா? என்ற சந்தேகமும் மக்களிடத்தில் எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக பாற்சோறு உண்டுவரும் இன்றைய நிலையிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்று வருவதும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருப்பதும் பாற்சோறு உண்பதை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வந்த பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனினும் இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்ற நிலையில் எமது இளைஞர்கள் இல்லை அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் இருக்கின்றது. அந்த வகையில் இளைஞர்களின் எதிர்காலத்துக்காக பல திட்டங்களை உருவாக்கியுள்ள ஜனாதிபதி இவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உதவ வேண்டும்.

எமது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுதலை செய்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கியும் அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் இது நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022