திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்
corona
sri lanka
people
By Shalini
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மிக இறுக்கமான முறையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் இன்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பயணக்கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதை அடுத்து வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகப்படியாக திருகோணமலைக்கு வந்த வண்ணம் இருந்ததால் போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தினுள் நுழைபவர்கள் அக்போபுர மற்றும் ரொட்டவெவ ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் இடைமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு போதிய ஆதாரங்களுடன் உள் வருபவர்களது வாகனங்களுக்கு கிருமித்தொற்று நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குறித்த கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்